பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா ஆற்றில் வீழ்ந்ததில் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் 

By Vishnu

13 Aug, 2022 | 07:50 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா (Drone Camera) தியவன்ன ஆற்றில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விபத்துக்குள்ளான டிரோன் கெமரா மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  இந்த டிரோன் கெமராவானது, கடந்த மாதம் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரால் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, டிரோன் னெமராவை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றபோதிலும் அது கைகூடாமல்  தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

தியவன்னாவில் விபத்துக்குள்ளான குறித்த டிரோன் கெமராவை  கடற்படையின் 'டைவிங்' குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50