இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது - சரத் வீரசேகர

By Digital Desk 5

13 Aug, 2022 | 03:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது.

யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுவான் வான்ங் -05 கண்காணிப்பு கப்பல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சீனாவின் யுவான் வான்ங்-05 கண்காணிப்பு  கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழங்கினார்.

தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முயற்சிப்பது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும்.

யுவான் வோங்  கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது.

இவ்விரு நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.இலங்கையின் வெளிவிவகார கொள்கை நடுநிலையாக பேணப்பட வேண்டும்.

யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது.இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.சீன கப்பல் உளவு பார்ப்பதற்காகவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

சீனாவின் கப்பல் இந்தியாவை உளவு பார்ப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தராமல் கடற்பரப்பில் இருந்தவாறே இந்தியாவை உளவு பார்க்க முடியும்,ஆகவே இந்த கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50