அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம்

By Digital Desk 5

13 Aug, 2022 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க  பொது நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.எரிபொருள் விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்பியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம்  இவ்விடயம் குறித்து  கவனம் செலுத்தியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒருமாத காலத்திற்கு அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அது தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்பிரகாரம் தற்போது அரச ஊழியர்களை ஐந்து நாட்களும் சேவைக்கு அழைப்பது குறித்து  பொதுநிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் பொது போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்கி,பொது போக்குவரத்து சேவையினை விரிவுப்படுத்தும் ஆலோசனையை பொது நிர்வாக அமைச்சு போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்திலான கடமை தேவைகளை கருத்திற்கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களும்  சேவைக்கு சமுகமளிக்க நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50