(ரொபட் அன்டனி்)

மத்திய வங்கியி்ன்  முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு பிரதமரினால் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவியிலிருந்தும் அவர் விலக்கப்படுவார். இந்த விடயத்தில் அவசரப்படவேண்டாம். பொறுத்திருங்கள். அர்ஜுன மகேந்திர இப்பொழுதான் நாடுதிரும்பியுள்ளார். அவர் கோட் சூட் மாற்றிக்கொண்டு வந்தவுடன் பதவிவிலக்கப்படுவார்  என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன  தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.