இரத்தமும் பயங்கரமும் - இலக்கிய நிகழ்வில் சல்மான் ருஸ்டி தாக்கப்பட்டதை நேரில் பார்த்தவர்களின் தகவல்

By Rajeeban

13 Aug, 2022 | 01:08 PM
image

நியுயோர்க்கின்  Chautauqua summer arts festivalஎன்பது வழமையாக அமைதியான மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வு,ஆயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் தங்களிற்கு பிடித்தமான எழுத்தாளர்களுடன் உரையாடுவதற்காக அந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.எனினும் உரையாற்றுவதற்காக அப்போதுதான் மேடைக்கு சென்ற சல்மான் ருஸ்டி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் காரணமாக இந்த நிலை மாறிவிட்டது. கற்றலுக்கான ஒரு பகுதியாக காணப்பட்ட அந்த இடம் இரத்தம் சிந்தப்பட்ட பகுதியாக மாறிவிட்டது.

ஓரிருசெகன்ட்களில் இடம்பெற்ற அந்த சம்பவம் அங்கு காணப்பட்டவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1988 இல்  அவரது நாவல்Satanic Verses மதநிந்தனை செய்கின்றது என குற்றம்சாட்டப்பட்டது முதல் இலக்குவைக்கப்பட்டவராக காணப்பட்ட சல்மான் ருஸ்டி அவ்வேளை மேடையிலிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்,அவரை பற்றிய அறிமுக உரை இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

அவ்வேளை கறுப்பு உடையணிந்த நபர் ஒருவர் வேகமாக மேடைக்கு ஓடிவந்து அவர்மீது தாக்குதலை மேற்கொண்டார்.

அவர் தனது முழங்கையால் சல்மான் மீது தாக்குதலை மேற்கொண்டதை என்னால் பார்க்க முடிந்தது என நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்தார் பில்லிவசு என்பவர்.

அங்கிருந்தவர்கள் அலறத்தொடங்க மக்கள் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவரை பிடிப்பதற்கும் சல்மான் ருஸ்டிக்கு சிகிச்சை வழங்குவதற்கும் மேடைக்கு ஒடினார்கள்.

சல்மான் ருஸ்டி பல தடவை கத்தியால் குத்தப்பட்டிருந்தார்,அவரது கழுத்திலும் கத்திக்குத்து இடம்பெற்றிருந்தது,அவர் மேலே பார்த்தவாறு நிலத்தில் விழுந்து கிடந்தார்,யாரோ அவரது காலை உயர்த்திவைத்தனர்.

சல்மான் ருஸ்டி இரத்தவெள்ளத்தில் காணப்பட்டார் மேடையிலிருந்து குருதி கீழே ஒடிக்கொண்டிருந்தது அவரை காப்பாற்ற முயன்றவர்கள் நாடித்துடிப்பு உள்ளது நாடித்துடிப்பு உள்ளது என  தெரிவித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்தனர்.

அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தாக்குலை மேற்கொண்டவரை கைதுசெய்தார்,அவர் நியுஜேர்சியை சேர்ந்த 24 வயது ஹடி மட்டார் என அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் ஆறு பேர் ஸ்டிரெச்சரில் வைத்து வெளியே புல்தரையில் காணப்பட்ட ஹெலிக்கொப்டருக்கு கொண்டு சென்றனர். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சல்மான் ருஸ்டிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது அவர் தனது ஒரு கண்பார்வையை இழக்கும் ஆபத்துள்ளது கைநரம்புகள் முற்றாக சேதமாகியுள்ளன என அவரது முகவர் தெரிவித்தார்.

இலக்கியவிழாவின் அறிவிப்புகளின் படி சல்மான் ருஸ்டி அமெரிக்கா நாடுகடந்து வாழும் எழுத்தாளர்களிற்கும் கலைஞர்களிற்கும் புகலிடம் அளிப்பது குறித்தும் மற்றும் படைப்பாற்றல் சுதந்திரத்திற்கான தளமாக அமெரிக்கா விளங்குவது குறித்தும் உரையாற்றவிருந்தார்.

துன்புறுத்தல் அச்சுறுத்தல்களின் கீழ் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களிற்கான வதிவிடதிட்டத்தின் இணை நிறுவுனர் ஹென்றி ரீஸ் அவரை மேடைக்கு அழைத்துவந்திருந்தார்.ரீசின் தலையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றதும் அங்கிருந்த சுமார் 4000 பேரையும் அமைதியாக வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர் அதன் பின்னர் அன்றைய நாளிற்கான அனைத்து நிகழ்வுகளும் இரத்துச்செய்யப்பட்டன.

1989 ம் ஆண்டு சல்மான் ருஸ்டியின் நாவல்Satanic Verses மதநிந்தனை செய்கின்றது என தெரிவித்த  ஈரானின் அப்போதைய ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கொமேனி ருஸ்டியை கொலை செய்யவேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தார்.( முகமது நபியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஊகங்களை தெரிவிக்கின்றது என அவர் குற்றம்சாட்டியிருந்தார்) சல்மான் ருஸ்டியின் நாவல் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.

மும்பாயில் பிறந்து பிரிட்டனில் தொழில்புரிந்துகொண்டிருந்த ருஸ்டி தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

அவர் வேறு பெயர்களில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்துவந்தார்.

குறிப்பிட்ட நூலின் பிரசுரத்துடன் தொடர்புடைய பலர் கொலை முயற்சிக்குள்ளாக்கினர்.

1991 இல் அந்த நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்த கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right