(நா.தனுஜா)
பொருளாதாரத்துறைசார் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களுடனான தமது ஈடுபாட்டினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியானது ஏற்கனவே தொழிற்பட்ட நாணயக்கொள்கை ஆலோசனைக்குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழு என்பவற்றுக்கு மாற்றீடாக மத்திய வங்கி ஆர்வலர் ஈடுபாட்டுக்குழுவினை ஸ்தாபித்துள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஓரங்கமாக இது நோக்கப்படுகின்றது.
அதன்படி மத்திய வங்கியினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மத்திய வங்கி ஆர்வலர் ஈடுபாட்டுக்குழுவிற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் சிறிமால் அபேரத்ன தலைமை வகிப்பதுடன், தனியார்துறை மற்றும் கல்வித்துறைசார்ந்த தலைசிறந்த புத்திஜீவிகள் 17 பேர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பொருளாதாரத்தினதும், குறிப்பாக நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு பொருளாதார நிலைவரம் தொடர்பில் தனியார் துறையினதும் கல்வித்துறையினதும் அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் பரிந்துரைப்பதே இந்த ஆர்வலர் ஈடுபாட்டுக்குழுவின் முதன்மைக் கடமையாகும்.
அத்தோடு இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் கொள்கைசார்ந்த வழிமுறைகள் தொடர்பில் பொருளாதார ஆர்வலர்களின் நோக்கிலிருந்து பின்னூட்டலை வழங்குவதும் அதனூடாக சிறந்த முறையில் கொள்கைத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மத்திய வங்கிக்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுப்பதும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் ஒன்றாகும்.
மேற்படி ஆர்வலர் ஈடுபாட்டுக்குழுவின் முதலாவது கூட்டம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் கடந்த 10 ஆம் திகதி மத்திய வங்கியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM