இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 258  ஒட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.

இலங்கை அணிசார்பில் கருணாரத்ன 88 ஓட்டங்களை பெற்றதுடன், குசல் பெரேரா 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி 258 ஓட்டங்களை பெற்றதனூடாக  சிம்பாப்வே அணியின் வெற்றியிலக்காக 491 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களை பெற்றதுடன், சிம்பாப்வே அணி 272 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.