மறைந்த அல்கொய்தா தலைவரின் பின்னணி

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 10:37 AM
image

லத்தீப் பாரூக்

2011இல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அய்மன் அல் சவாஹிரியை 2022 ஜுலை 31ஞாயிற்றுக் கிழமை அன்று தாங்கள் கொலை செய்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக இவர் கருதப்பட்டதாலேயே அமெரிக்கா இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சவாஹிரி பின்லாடனின் வலது கரமாக செயல்பட்டவர். அல்கொய்தாவின்; ‘அசல் மூளை’ என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர். அந்த அமைப்பின் பிரதான மூலோபாய திட்டமிடல் நிபுணராகவும், புத்திஜீவிகள் பிரிவின் பிரதான நபராகவும் திகழ்ந்தவர். 

அல்கொய்தா அமைப்பு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட போது, அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவால் உருவாக்கப்ட்டு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது பெரும்பாலும் உலகத்துக்கு மறைக்கப்பட்டதொரு உண்மையாக இருக்கின்றது. அன்று அமெரிக்கா, அதன் மேற்குலக நேச அணிகள், அரபு தேச நேச அணிகள், அல்கொய்தா என்று எல்லாமே ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யாவை விரட்டி அடிக்கும் உறுதியில் ஒரே முகாமில் இருந்தன.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யா முற்றாக துரத்தி அடிக்கப்பட்ட பின் அந்தப் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பின் லாடனும், சவாஹிரியும் விரும்பினர். 

ஆனால் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்களால் அமர்த்தப்பட்டிருந்த அரபு ஆட்சியாளர்களின் துணையோடு அந்தப் பிராந்தியத்தின் வளங்களை சுருட்டி மத்திய கிழக்கை நிலை குலையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தன

இதன் காரணமாகத் தான் பின்லாடனும் சவாஹிரியும் தமது போராட்டத்தை அமெரிக்காவுக்கும் அதன் நேச அணிகளுக்கும் எதிராகத் திருப்பினர். 

பின்லேடன் சவூதியில் கட்டட நிர்மாணத் துறையில் புகழ்பூத்த ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு. அவர் 2011இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் படைகளால் கொல்லப்பட்டார். அய்மன் அல் சவாஹிரியும் செல்வந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர். 

இவர் 1951 ஜுன் 19இல் மாதி நகரின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். எகிப்தில் உள்ள கௌரவமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கண் வைத்திய நிபுணர். 

அவரின் பாட்டனார் முஹம்மத் அல் அஹ்மதி அல் சவாஹிரி 20ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் அல் அஸ்ஹர் பள்ளிவாசலின் பிரதான இமாமாக இருந்தவர். அவரது தாய்வழி பாட்டனாரான அப்துல் றஹ்மான் ஹஸன் அஸாம் என்பவர் அரபு நாடுகள் அமைப்பின் முதலாவது செயலாளர் நாயகமாக இருந்தவர்.

சவாஹிரியின் தாய்வழி பாட்டனார் அப்துல் வஹாப் அஸாம் 1930களில் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் கலைபீடத்தின் பீடாதிபதியாகவும் கீழைத்தேய இலக்கியத்துறை பேராசிரியராகவும் கடமையாற்றியவர். சவாஹிரியின் தந்தை பிரபலமான வைத்தியர் எய்ன் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராக இருந்தவர். அவரது மாமனார் மஹ்பூஸ் அஸாம் எகிப்து லிபரல் கட்சியின் உப தலைவராக இருந்தவர்.

இவ்வாறான ஒருவர் ஏன், வன்முறைப் பாதையைத்; தெரிவு செய்தார் என்பது தான் ஆச்சரியமான கேள்வி. சவாஹிரி தன்னுடைய 14ஆவது வயதில், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இணைந்து கொண்டார். 

அந்த இயக்கத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க புத்திஜீவியாக இருந்த ‘செய்யித் குதுபின்’ கருத்துக்களால் கவரப்பட்ட சவாஹிரி 1960 களில் தனது மிகவும் இளமை பருவத்திலேயே இஸ்லாமிய அரசியல் இயக்கத்தோடு சேர்ந்து செயற்படத் தொடங்கினார்.

உலகம் ஒரு அறியாமை காலத்துக்குள் பிரவேசித்தள்ளதாக செய்யித் குதுப் கருதினார். தெய்வீக இறை சட்டங்களுக்கு எதிராக, மதச்சார்பற்ற மனிதச் சட்டங்களுக்கு ஆதரவாக மக்கள்; கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கருதினார். இதனால் உண்மையான முஸ்லிம் சமூகம் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் கருதினார்.

செய்யித் குதுபின் எழுத்துக்கள் பின்லாடனைப் போலவே சவாஹிரி மீதும் பெரும் செல்வாக்கு செலுத்தின. 1966இல் செய்யித் குதுப் கொல்லப்பட்ட பின் குதுபின் தூரநோக்கை தனது வாழ்வின் இலட்சியமாக எடுத்துக் கொண்டார் சவாஹிரி. 1965இல் செய்யித் குதுப் மீது பிரயோகிக்கப்பட்ட வன்மையான சித்திரவதைகள், அதனைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டமை என்பன அவரை பெரிதும் பாதித்தன. 

தனது வாழ்வின் முன்மாதிரியாக தான் எடுத்துக் கொண்ட ஒரு நபர் இவ்வாறு கொல்லப்பட்டதால் அவரது கருத்துக்களையும் கொள்கைகளையும் அமுலாக்க தனது உயிரைக் கூட தியாகம் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டார் சவாஹிரி. 

இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டமைக்காக பெரும்பாலான மக்களால் துரோகி என்று வர்ணிக்கப்பட்ட அன்றைய எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாத் 1981இல் கொல்லப்பட்ட பின் அது தொடர்பான விசாரணைகளின் போது நீதிமன்றக் கூண்டில் நின்றவாறு “நாம் ஏற்கனவே பல தியாகங்களை புரிந்து விட்டோம். இஸ்லாத்தின் வெற்றி நிலைநிறுத்தப்படும் வரை இன்னும் பல திhகங்களை செய்யவும் தயாராக இருக்கின்றோம்” என்று கூச்சலிட்டவர் தான் சவாஹிரி.

சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி தாக்குதல்களில் காயம் அடைந்த முஜாஹிதீன் போராளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்தக் காலப்பகுதியில் தான் அவருக்கு பின்லாடனுடன் தொடர்புகள் ஏற்பட்டன.

1989இல் சோவியத்சார்பு அரசின் வீழ்ச்சிக்குப் பின் அல்குவைதாவின் அதே சிந்தனைகளைக் கொண்ட தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்தது. இஸ்லாமிய பூமியில் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இருக்கக் கூடாது என்பதில் பின்லாடன் மற்றும் சவாஹிரி போன்றோர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். பலஸ்தீனத்தில் நீடிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அவர்கள் தீவிரமாக எதிர்த்தனர். இந்த நிலைமை தமது பிரசாரத்தை விரிவாக்குவதற்கான ஒருநியாயத்தை அவர்களுக்கு வழங்கியது.

1998இல் இருவரும் ஒருகூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். தொடர்ந்து, செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் சவாஹிரியை கைது செய்வதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர் கடந்த பத்து வருட காலத்தில் அல்கொய்தாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்ற எடுக்கப்பட்ட முடிவானது, பலஸ்தீன தரப்போடு இணக்கப்பாடு மற்றும் சமாதானம் என்பனவற்றை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன என்பதற்கான சான்றாகவே காணப்படுகின்றன. இதனால் புனிதப் போருக்கான பிரகடனத்தையும் சவாஹிரி விடுத்திருந்தார்.

டெல் அவிவ்வும் முஸ்லிம்களுக்கான பூமி என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த ஐந்து நிமிட நேர காணொளியில் பலஸ்தீன அதிகார சபையை அவர் பலஸ்தீனத்தின் விற்பனையாளர்கள் என்று வர்ணித்திருந்தார். தனது சகாக்கள் இந்த நிலைக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார். இறுதிவரையில் அதேநிலைப்பாட்டிலேயே இருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13