பொருளாதார நெருக்கடி : மேலும் 4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

By Digital Desk 5

13 Aug, 2022 | 10:29 AM
image

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 இலங்கையர்கள் அகதிகளாக  இன்று காலை  இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி இதுவரை 129 இலங்கையர்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயமாலினி (50) அவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள்  பதுசிக (19) ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்   மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் சென்ற இலங்கையர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் கரையோர காவல் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்த மண்டபம் கரையோர பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை மா ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் நால்வரும்  2006 முதல் 2019 ஆண்டு வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்ன 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

இந்நிலையில், இலங்கையிலிருந்து இந்தியாவின் தமிழகம் சென்ற அகதிகளின் எண்ணிக்கை  133 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23