மன்னார் மடுமாதா ஆலயத்தின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் இன்றைய தினம் பாண்டியன்குளம் நட்டன்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது .
எதிர்வரும் 15 ஆம் திகதி மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதாயாத்திரையாக செல்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு இரணைப்பாலை வற்றாப்பளை பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்திலிருந்து நேற்று முன்தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் இன்று காலை நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்திருந்த கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 13 ஆம் திகதிக்கு பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இவ்வருடம் அதிகளவான மக்கள் நேர்த்தி கடன்களை நிறைவுசெய்ய கூட்டம் கூட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்த்தர்கள் முல்லைத்தீவு-மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம் ,நட்டாங்கண்டல்,பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM