(நா.தனுஜா)
காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறிவிட்டதன் காரணமாக அரசியல்வாதிகளோ அல்லது சாதாரண பொதுமக்களோ போராட்டத்தின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
ஏனெனில் எமது நாட்டில் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பல்வேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு போராட்டங்களும் அவற்றின் விளைவாகப் பெருமளவு உயிரிழப்புக்களும் பதிவாகியிருக்கின்ற போதிலும், அப்போராட்டங்களால் நாட்டின் ஆட்சியாளர்களைத் தோற்கடிக்கமுடியவில்லை.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன்றளவிலே நாட்டுமக்கள் தமது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல இயலாத வகையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
முதலாவதாக இந்த நெருக்கடிக்குக் காரணம் என்னவென்பதைக் கண்டறியவேண்டியது அவசியமாகும். அதேவேளை காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறிவிட்டதன் காரணமாக அரசியல்வாதிகளோ அல்லது சாதாரண பொதுமக்களோ போராட்டத்தின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
ஏனெனில் எமது நாட்டில் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பல்வேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு போராட்டங்களும் அவற்றின் விளைவாகப் பெருமளவு உயிரிழப்புக்களும் பதிவாகியிருக்கின்ற போதிலும், அப்போராட்டங்களால் நாட்டின் ஆட்சியாளர்களைத் தோற்கடிக்கமுடியவில்லை.
இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான மக்கள் போராட்டம் மிகவலுவான அஹிம்சைப்போராட்டமாக அமைந்ததுடன் இது எந்தவொரு கட்சிகளினதும் செல்வாக்கின்றி மக்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டமாகவும் பதிவானது.
எவ்வித இன, மத, கட்சி பேதமுமின்றி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் நாட்டின் ஆட்சியாளர் துரத்தியடிக்கப்பட்டதுடன் முடிவிற்குவந்தது.
இறுதியில் இந்நாட்டின் 69 இலட்சம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறினார். எனவே இத்தகைய அஹிம்சைப்போராட்டத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது மறந்துவிடவோ முடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்கள் தூண்டப்பட்டமைக்குக் காரணம் என்ன? நாடு மிகமோசமான நெருக்கடிக்குள் தள்ளப்படுவதற்கு யார் காரணம்? சுமார் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்று ஆட்சியமைத்த கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியது.
ஆனால் அதனைப் பயன்படுத்தி அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதனூடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டதுடன், அவரது முறையற்ற தீர்மானங்கள் மற்றும் சீரற்ற நிர்வாகம் என்பன நாடு தற்போதைய நெருக்கடிநிலைக்குத் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது என்று சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM