நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் - வினோ நோகராதலிங்கம்

Published By: Vishnu

12 Aug, 2022 | 04:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் நிபந்தனைகளுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்க தயாரில்லை என கூட்டமைப்பின் வன்னிமாவட்ட உறுப்பினர் வினோ நோக ராத லிங்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையிலேயேஅவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று அரசியல் ரீதியாக ,பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான கட்டத்திலே இருக்கின்ற இந்த நேரத்திலே சர்வகட்சி அரசினுடைய தேவையை புரிந்து கொள்கின்றோம்.

உணர்ந்து கொள்கின்றோம். அனைத்து கட்சிகளும் இணைந்து அப்படி ஒரு அரசு உருவாகுமானால் நிபந்தனைகளோடு நாட்டு மக்களின் நன்மை கருதி தற்போதுள்ள சூழ்நிலை கருதி அந்த அரசில் இனணந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

யுத்தம் முடிந்த பின்னர் ஐ. நா. ஆணையாளரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு 13 பிளஸ் பிளஸ் தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

ஆனால்  எந்த தீர்வு முயற்சியை யும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. அதேபோல்தான்  நல்லாட்சி அரசிலும் நான்கரை வருடங்கள் பேச்சுவார்த்தை  மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெறுவதற்காக எமது கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயாவை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி அவரை நமப  வைத்து எமது 16 எம்.பிக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டனர்  தற்போதைய ஜனாதிபதியை ரணிலும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரியும் ஏமாற்றிய வரலாறும் உண்டு.

எனவே  கண்ணை மூடிக்கொண்டு இந்த சர்வகட்சி அரசுக்கு ஆதரவு தருவதற்கு நாம் தயாரில்லை. அரசினதும் எதிர்கட்சிகளினதும் தமிழ் மக்களிடமிருந்து எம்மை பிரிக்கும் சகுனி விளையாட்டுக்களினால்தான் 16 எம்.பிக்களைக்கொண்டிருந்த எமது கட்சி இன்று 10  எம்.க்களுடன் நிற்கின்றது.

மீண்டும் எம்மை எமது மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பீர்களேயானால் , எமது ஆசனங்களை வெட்டி குறைப்பதற்கு நீங்கள் முயற்சிப்பீர்களேயானால் நாங்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாறத்தயாராக  இல்லை.

யுத்தத்தில் காணாமல் போன தமது  உறவுகளுக்காக 2000 நாட்களைக்கடந்து அவர்களின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வடகிழக்கின்  8 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களும் இணைந்து இந்த 2000 ஆவது நாளை போராட்டத்தினூடாக முன்னெடுக்கின்றனர்.

நாம் இங்கு பதாகைளுடன் எழுந்தவுடன் ஒளிப்பதிவு நிறுத்தப்படுகின்றது. பதாகைகளை பிடித்தால்  நீங்கள் உடனடியாக இது புலிகளுக்கான அஞ்சலி என பிரசாரம் செய்கின்றீர்கள் .

சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகள் கூட பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரத்திலிருந்து ,கருத்து சுதந்திரத்திலிருந்து மறுக்கப்படுகின்றார்கள் .தடுக்கப்படுகின்றார்கள் . இதற்கும் எமக்கு நீதி வேண்டும்.

தமது காணாமல் போன் உறவுகளுக்காக   2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி  அந்த மக்கள் வீதிகளில் தொடங்கிய போராட்டம் இன்று 2000 நாட்களைக்கடந்து 121 பெற்றோரை  இழந்து  முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த போராட்டத்த்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பாகிய நாங்கள் இந்த சபையில் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய 121 பெற்றோர் ,உறவுகள், போராட்டக்களத்தில் இருந்தவர்கள் நோய்வாய்ப்பட்டு ,வயது முதிர்ச்சியினால் மரணித்துள்ளனர்.

இந்த மரணங்களை சாதாரணமாக விட்டுவிட முடியது. இந்த மரனனக்ளும் இந்த அரசினுடைய படுகொலைப் பட்டியலில் வரவேண்டிய விடயம். அவர்கள் மரணிக்கவில்லை. கொல்லப்பட்டார்கள். அவர்களை வீதிகளில் இறங்கி போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11