நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வு

By Digital Desk 5

12 Aug, 2022 | 04:54 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா  வெள்ளிக்கிழமை  (12) இடம்பெற்றது.

நாவலர் மண்டபத்தில்  இடம்பெற்ற இவ் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனால் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிக்கு உதவிய யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து 'யாழ்.விருது' வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், வீணாகான குருபீடத்தின் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் ச.முகுந்தன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுநிலைப் பீடாதிபதி தி.கமலநாதன், மாநகர சபையின் சைவ சமய விவகார குழு உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

2022-09-24 21:24:26
news-image

வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி...

2022-09-23 12:53:39
news-image

Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு...

2022-09-20 22:22:19
news-image

இலங்கையில் “நந்தவனம்” அறிமுகம்

2022-09-19 16:29:40
news-image

சென் மேரிஸ் கலவன் பாடசாலைக்கு கழிவறைகளை...

2022-09-18 21:31:46
news-image

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான...

2022-09-16 21:47:10
news-image

ஐரோப்பிய மொழிகள் தினம் : நாடளாவிய...

2022-09-15 11:06:45
news-image

கொழும்பு செங்குந்தர் முன்னேற்ற சபை வருடாந்த...

2022-09-13 12:51:59
news-image

எப்பல் இன்டநஷ்னல் கொலேஜின் வருடாந்த பட்டமளிப்பு...

2022-09-12 20:15:35
news-image

எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் உருவச்சிலை திரைநீக்கம்

2022-09-12 17:23:06
news-image

சிறப்பாக இடம்பெற்ற முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு அருள்மிகு...

2022-09-10 13:34:33
news-image

செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ...

2022-09-09 14:59:47