கோட்டாபய செய்த தவறையே தற்போதைய ஜனாதிபதியும் தொடர்கிறார் - அனுரகுமார

By Digital Desk 5

12 Aug, 2022 | 05:25 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக கொள்கையினை பேச்சளவில்  மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டு அவசரகால சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ செய்த தவறையே தற்போதைய ஜனாதிபதியும் தொடர்கிறார். புதிய மக்களாணை ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்தி வைப்பு  விவாதத்தில் உரையாற்றும் போதி அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவiர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு  மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.   தவறான  அரசியல் கலாசாரத்தினால் முழுமையாக மாற்றியமைக்க  வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது. வெளியில் இருந்து யாராவது வந்து இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

வீழ்ச்சியடைந்த நாட்டை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமே அல்லது வெளிநாட்டு அரசாங்கமோ மீட்டெடுக்காது. ஆனால் இவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்காக  தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை தவிர்த்து தானாகவே மீளெழ முடியாது. அதேபோன்று வீழ்ச்சியடைய காரணமானவர்களும் இதில் இருந்து மீண்டெழ உதவப் போவதில்லை. பொதுமக்களின் தலையீடு மூலமே மீண்டெழ முடியும்.

ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்‌ஷ இதனால் விலகியுள்ளார். ஆனால் தனக்கு எதிராக மக்கள் ஆணை வழங்கிய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பொது ஜன பெரமுனவிற்கு முழுமையாக சிங்கள,பௌத்த மக்கள் ஆணையே கிடைத்தது. முன்னாள் பிரதமர மஹிந்த  ராஜபக்‌ஷவே இதற்கு காரணமாக இருந்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்க வேண்டும் என்ற விடயமே இதற்கு காரணமாக இருந்தது. அவரும் பதவி விலகியுள்ளார். இதன்படி அந்த மக்கள் ஆணை இப்போது இரத்தாகியுள்ளது.

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன? புதிய மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும். சர்வகட்சி,பல கட்சி என எந்த அரசாங்கத்தை அமைத்தாலும் மறுநாளே தீர்வை எதிர்பார்பர். ஆனால் அதனை செய்ய முடியாது. இந்த நேரத்தில் புதிய மக்கள் ஆணை ஊடாகவே எதனையும் செய்ய முடியும்.

அதுவரையில் குறுகிய கால வேலைத்திட்டத்துடன் நாட்டை வழமைக்கு கொண்டு வரக் கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதற்காக கால எல்லை இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான உரிமை அந்த அரசாங்கத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே மக்கள் ஆணைகள் கிடைத்துள்ளன. கூட்டாக அரசாங்கத்தை செய்யுமாறு மக்கள் ஆணை கிடையாது.

இந்த இடத்திலேயே இடைக்கால ஆட்சி இருக்க வேண்டும். இதனால் சர்வகட்சி அரசாங்கத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

எவ்வாறாயினும் இறுதியில் ரணில் - ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அமைத்து அந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக வருமாறு சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் இப்போது அழைக்கின்றனர்.

அதற்கு நாங்கள் தயாராக இல்லை. நியாமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம்.

இன்றும் நாடு அவசரகால சட்டத்தின் கீழே செயற்படுகின்றது. ஜனாதிபதி எந்தத் தீர்மானத்தையும் எடுக்கும் அதிகாரங்கள் அதன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இங்கே ஜனநாயகம் தொடர்பில் கதைத்தாலும் அவர் அவசரகால சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே நாட்டை ஆட்சி செய்கின்றார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தவர்களை பயங்கரவாதி போன்று கைது செய்கின்றனர். தமக்கு வாக்களித்தவர்களை மகிழ்விக்க இவ்வாறாக ஜனாதிபதி செயற்படுகின்றார்.

இங்கே தழிழ் பழமொழியொன்று உள்ளது. 'சாத்தான் வேதம் ஒதுகின்றது' என்பதே அது.அதேவேளை ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

கோத்தாபய ராஜபக்‌ஷ செய்த தவறும் இதுதான். அவரிடம் விவசாய ஆலோசகராக வைத்தியர் இருந்துள்ளார். அதேபோன்ற நிலைமையே இப்போதும் இருக்கின்றது. அகிலவிராஜ், சாகல மற்றும் ஆசுமாரசிங்கவிடம் ரணில் விக்கிரமசிங்க என்ன ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளப் போகின்றார் என்று தெரியவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25