அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து,  அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார். 

நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனக்கு முதன் முதலாக ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்ததார். தானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலின் 8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். 

ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். 

இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். 

ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை நனவாக்கலாம்.

நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன். 

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். 

அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. 

அமெரிக்காவை நண்பனாக நினைத்து நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம்.  

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம்  திகதி பொறுப்பேற்கிறார்.

டொனால்டு டிரம்ப்: 276 (23 மாகாணங்களில் 264 இடங்களில் வெற்றி)

ஹிலாரி கிளிண்டன்: 218 (13 மாகாணங்களில் 218 இடங்களில் வெற்றி)