சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' அப்டேட்

Published By: Digital Desk 5

12 Aug, 2022 | 11:29 AM
image

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிலம்பரசன் நடிப்பில் தயாராகி அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

ஸ்டைலீஷ் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இதில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைதாதிருக்கிறார். எக்சன் ட்ராமா ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ''மறக்குமா நெஞ்சம். '' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் ஓகஸ்ட் 14-ம் திகதியன்று மாலை 6: 21 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சிலம்பரசன்- கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டணியில், 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படைப்புகளை கடந்து மூன்றாவது முறையாக ' வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்திருப்பதால் 'மறக்குமா நெஞ்சம்..' பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இதனிடையே இந்த படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும்,மேலும் இந்த படத்திற்கான பின்னணி பேசும் பணியை நடிகர் சிலம்பரசன் அண்மையில் நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right