அதிவேக நெடுஞ்சாலையொன்றின் மத்தியில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா எனும் நகரிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக கலிபோர்னியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை என்ஜின் கொண்ட, 'பைப்பர் செரோக்கீ' ரக விமானம் திடீரென வீதியில்; இறங்கிய காட்சி வீடியோவும் பதிவாகியுள்ளது.
இவ்விமானத்தில் விமானி ஒருவரும், பயணி ஒருவரும் இருந்தனர்.
3 பேர் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றிலும் இந்த விமானம் மோதியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
இச்சம்பவத்தினால் மேற்படி வீதி பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தது.
அவ்வேளையில் வீதியில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக அதன் விமானி அண்ட்ரூ சோ தெரிவித்துள்ளார்.
விமானத்தை தரையிறக்குவதற்கு இடைவெளியை தேடிக்கொண்டிருந்தேன். எனது வலது புறம் நெடுஞ்சாலையொன்று இருந்தது. ஏனைய வாகனங்களில் மோத நேரிடும் என பயந்தேன்.
ஆனால், போதுமான இடைவெளியை கண்டவுடன் விமானத்தை இறங்கினேன்' என அவர் கூறியுள்ளார். இவர் 12 வருட அனுபவம் கொண்ட விமானி ஆவார்.
தீப்பற்றிய விமானத்தைத் தவிர பிக் அப் வாகனமொன்றின் பின்புறத்துக்கு மாத்திரம் சிறிய சேதம் ஏற்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM