காத்தான்குடியில் பாடசாலை ஒன்றில் 10 வயது சிறுவனை அடித்த ஆசிரியை ஒருவர் கைது

Published By: Digital Desk 3

12 Aug, 2022 | 12:02 PM
image

(கனகராசா சரவணன்) 

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அதிபர் தலை மறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றில் இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு  3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவனை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து வீடு சென்ற சிறுவன் மீது தளும்புகளை கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்ததையடுத்து தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11) முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில், சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்த ஆசிரியை கைதாகியுள்ளதோடு,  அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய  குற்றப் விசாரணைப் பிரிவினார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22