பருமனான பெண்கள் தொடர்பான கட்டுரையில் தனது புகைப்படத்தை பிரசுரித்ததால் வழக்கு தொடுக்கும் ஈராக்கிய நடிகை

By Vishnu

12 Aug, 2022 | 12:15 PM
image

பரு­ம­னான பெண்கள் தொடர்­பான கட்­டு­ரை­யொன்­றுக்கு தனது புகைப்­ப­டத்தை பயன்­ப­டுத்­தி­யதால் பிரித்­தா­னிய சஞ்­சி­கை­யொன்­றுக்கு எதிராக் வழக்குத் தொடுக்­கப்­போ­வ­தாக ஈராக்­கிய நடிகை ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

'தி எகா­னோ­மிஸ்ட'; எனும் பிரித்­தா­னிய சஞ்­சி­கையில், அரபு உலகில் ஆண்­க­ளை­விட பெண்கள் ஏன் பரு­மா­னக இருக்­கி­றார்கள்?' என்ற தலைப்பில் கட்­டு­ரை­யொன்று வெளி­யா­கி­யி­ருந்­தது. 

சமூக கட்­டுப்­பா­டுகள், வேலைக்கு செல்ல முடி­யாமை கார­ண­மாக வீடு­க­ளுக்குள் பெண்கள் முடங்­கி­யி­ருப்­ப­தாலும், உடற்­ப­யிற்சி நிலை­யங்கள் மற்றும் பொது இடங்­களில் விளை­யாட்டு நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­கான தடை­களும் பெண்­களின் உடற்­ப­ரு­ம­னுக்கு  வழி­வ­குப்­ப­தாக அக்­கட்­டு­ரையில் கருத்துத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இக்­கட்­டு­ரையில் தன்­னு­டைய புகைப்­படம் வெளி­யி­டப்­பட்­ட­மைக்கு எதி­ராக வழக்குத் தொடுப்­ப­தாக  ஈராக்­கிய நடிகை இனாஸ் தாலேப் (42)  தெரி­வித்­துள்ளார்.

இக்­கட்­டு­ரையில், நடிகை இனாஸ் தாலேப்பின் நேர்­காணல் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. ஆனால், இனாஸ் தாலேப்பை அழ­குக்­கான முன்­னு­தா­ர­ண­மாக ஈராக்­கி­யர்கள் அடிக்­கடி குறிப்­பி­டு­வ­தாக அக்­கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

உலகில் 15 சத­வீ­த­மான பெண்­களும் 11 சத­வீ­த­மான ஆண்­களும் அதிக பரு­ம­னா­ன­வர்­க­ளாக உள்­ள­தாக மேற்­படி சஞ்­சிகை தெரி­வித்­த­துடன் மத்­திய கிழக்கில் 26 சத­வீ­த­மான பெண்­களும் 16 சத­வீ­த­மான ஆண்­களும் அதிக பரு­ம­னாக உள்­ளனர் என அதில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இக்­கட்­டு­ரை­யுடன் வரு­டாந்த பாபி­லோ­னிய விழாவில், தற்­போது ஈராக்கின் பகு­தி­யா­க­வுள்ள மெச­பெத்­தே­மியா நாக­ரீக கால பாரம்­ப­ரி­யத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் ஆடை­யொன்றை அணிந்­தி­ருந்த நடிகை இனாஸ் தாலேப்பின் புகைப்­படம் வெளி­யா­கி­யி­ருந்­தது.

இக்­கட்­டு­ரை­யா­னது அரே­பிய பெண்­க­ளுக்கு குறிப்­பாக ஈராக்­கிய பெண்­க­ளுக்கு அவ­ம­திப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது என நடிகை இனாஸ் தாலேப் கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில், பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்­கப்­போ­வ­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார். 

1980 ஆம் அண்டு பிறந்த இனாஸ் தாலேப், 1996 முல் உள்ளூர் தொலைக்­காட்சி நாட­கங்­களில் நடித்­த­துடன், தொலைக்­காட்சி விவாத நிகழ்ச்­சி­க­ளையும் நடத்தி வரு­கிறார். 

ஈராக்கின் மிகவும் பிர­ப­ல­மான நடி­கை­களில் ஒரு­வ­ரான இனாஸ் தாலேப்பை இன்ஸ்­டா­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் 90 லட்சம் பேர் பின்­தொ­டர்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

நடிகை இனாஸ் தாலேப்­புக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் ஈராக்­கிய பெண் பிர­ப­லங்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

இனாஸ் தாலேப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்க வேண்­டிய தார்­மீக மற்றும் மனி­தா­பி­மான கடப்­பாடு எமக்கு உள்­ளது என ஈராக்கின் குடி­யேற்றம் மற்றும் இடப்­பெ­யர்வு விவ­கார முன்னாள் அமைச்சர் இவான் கெப்ரோ கூறி­யுள்ளார்.

எனினும் ஈராக்கிய ஆராய்ச்சியாளரான லீனா முசாவி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பத்திரிகைக்கு எதிராக நடிகை தாலேப் வழக்குத் தொடுப்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். 

'பெண்­க­ளுக்கு முறை­யான நடை­பாதை இல்­லாத,  பெண்கள் நடக்­கக்­கூ­டிய பூங்­காக்கள் இல்­லாத ஒரு தலை­ந­கரில் நாம் வசிக்­கிறோம்' என அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45
news-image

தேனி­ல­வின்­போது பாலியல் தொழி­லா­ளியை நாடிச் சென்­றவர்...

2022-08-29 11:36:30
news-image

700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக்...

2022-08-29 11:33:44
news-image

விந்து அடங்­கிய ஆணு­றை­களை வகுப்­புக்கு கொண்­டு­வ­ரு­மாறு ...

2022-08-26 12:07:36
news-image

சிறுநீர் கழிப்­ப­தற்­காக விழித்­தெ­ழுந்த இளைஞர் சவப்­பெட்­டிக்குள்...

2022-08-26 10:25:23