தாய்லாந்தை சென்றடைந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டா

11 Aug, 2022 | 09:51 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய நிலையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் தாய்லாந்தின் பங்கொக் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் பயணித்திருந்தனர்.

சுமார் ஒரு மாத காலத்தை அண்மித்து, சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணித்த நிலையில் தற்போது அந்நாட்டின் பாங்கொக் நகரை சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53