கொட்டாஞ்சேனை கொள்ளை : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்து அவதானம் - வர்த்தகரின் மனைவி தொடர்பிலும் தகவல் சேகரிப்பு

By T Yuwaraj

11 Aug, 2022 | 09:15 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனை - சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர  வர்த்தகரின் வீட்டுக்குள்  அத்து மீறி கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட பணம், நகைகளை ஆயுத முனையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்புகள் இருப்பதாக உளவுப் பிரிவினர்  உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிக்கையளித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில்  முன்னர் சேவையாற்றியவரும் தற்போது அதனை அண்மித்த பொலிஸ் நிலையம் ஒன்றில் சேவையில் இருப்பதாகவும் கூறப்படும்  பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவருக்கு குறித்த கொள்ளையுடன் தொடர்புகள்  இருப்பதாக  அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.


 இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்தின் அவதானம் திரும்பியுள்ளது. கொள்ளைக்காக குறித்த வீட்டுக்கு பொலிஸார் எனக் கூறிக்கொண்டு சென்றுள்ள இரு சந்தேக நபர்களும் கையில் வைத்திருந்ததாக கூறப்படும் கை விலங்கினை குறித்த பொலிஸ் உத்தியோகத்தரே வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், வர்த்தகரை விசாரிக்கும் முறை, கொள்ளையர்களின் உடை உள்ளிட்டவைகளும் அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனையே என சந்தேகிக்கப்படுகின்றது.


 இந்நிலையில், கொள்ளையிடப்பட்ட  வீட்டின் உரிமையாளரான  வர்த்தகரின் மனைவியின் இரு நண்பிகள்  கொள்ளையை திட்டமிட்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியில், உளவுத் துறையினர்  வர்த்தகரின் மனைவி தொடர்பிலும் தகவல் சேகரித்துள்ளனர். அது குறித்த தகவல்களையும்  உளவுத் துறையினர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50