ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்க நீதி அமைச்சர் ஜனாதிபதிக்கு பரிந்துரை

By Vishnu

11 Aug, 2022 | 09:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது நியாயமானது. அவரை விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவது நியாயமானது.

அதனால் இதுதொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு நான் சட்டமா அதிபரிடம் ஆலாேசனை பெற்றுக்கொண்டேன். அதேபோன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமிருந்தும் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டேன்.

அத்துடன் நிபந்தனை ஒன்றின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பாக நான் ஜனாதிபதிக்கு பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றேன்.

அதாவது, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கே நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கி இருக்கின்றது.

ஒரு பக்கத்தில் அவர் இந்த விடயத்துக்காக நீண்ட காலமாக தண்டனை அனுபவித்திருக்கிறார் என்பதாலும் அவர் சிறந்த நன்நடத்தையுடன் இருப்பதாலும் அவருக்கும் தற்போது அவருக்கு மன்னிப்பு வழங்குவது மிகவும் நியாயமானது என்றே நாங்கள் நம்புகின்றோம்.

என்றாலும் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். அதனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தெரிவித்திருந்த கூற்றுக்காக  கவலை தெரிவித்து, சத்தியக் கூற்று ஒன்றை நீதிமன்றத்துக்கு வழங்கிய பின்னர் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது பொருத்தம் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 4...

2023-02-08 14:35:30
news-image

ஜனாதிபதியின் அக்கிராசன மோகத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தை...

2023-02-08 16:00:01
news-image

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருவரை...

2023-02-08 21:10:29
news-image

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்...

2023-02-08 21:08:28
news-image

ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது -...

2023-02-08 15:56:23
news-image

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் -...

2023-02-08 14:36:56
news-image

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது...

2023-02-08 16:05:15
news-image

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு...

2023-02-08 14:34:26
news-image

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை...

2023-02-08 16:52:58
news-image

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி...

2023-02-08 16:26:15
news-image

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற...

2023-02-08 15:54:09
news-image

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின்...

2023-02-08 15:18:23