நாவலப்பிட்டி கெட்டபுலா ஓயாவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் காணாமல்போயிருந்தனர்.
கெட்டபுலா தோட்ட புதுக்காடு அக்கரவத்தை ஆகிய பிரிவுகளில் வசித்துவந்த 36 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான அம்மாவாசி சந்திரமோகன், 49 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் சுரேஸ் குமார் மற்றும் 3 பிள்ளைகளின் தாயாக ஜெயராம் ஜெயலட்சுமி ஆகியோரே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.
கெட்டப்புலா தோட்டமானது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வருகின்றது.
நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடும்பங்களுக்கும் காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் காணாமல்போன நபர்களினது பிள்ளைகளின் முழுமையான கல்விச்செலவினையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்போது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக இயக்குனர் சமிந்த குணரட்ன, கெட்டபுலா தோட்ட பொறுப்பதிகாரி சமிந்த சில்வா, இம்புள்பிட்டிய தோட்ட அதிகாரி கசுன் காரியசம் ஆகியோர் காணாமல்போனவர்களது உறவினர்களிடம் இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM