அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு நிதியுதவி

11 Aug, 2022 | 02:17 PM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிடைத்த பரிசு தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு குறித்த பரிசுத் தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இலங்கையுடன் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த ஜூன் 7 முதல் ஜூலை 12 வரை விளையாடியது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களில் கிடைத்த  4 5,000 அவுஸ்திரேலிய டொலர் பரிசுத்தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்