அவசரகால சட்டத்துக்கு எதிரான மனுக்கள் : உயர் நீதிமன்றில் பரிசீலிப்பதற்கு தீர்மானம்

By T Yuwaraj

11 Aug, 2022 | 06:40 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான  2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவித்தலை இன்று ( 10)  உயர் நீதிமன்றம் மனுக்களை ஆராய்ந்த போது அறிவித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள்  நேற்று ஆராயப்பட்டன.

இதன்போது இம்மனுக்கள்  தொடர்பில் தமது ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக்க குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால கட்டளைகள் அடங்கிய வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ள நிலையில்,   அதனை ஆராய்வதானால் கண்டிப்பாக மூவரடங்கிய நீதியரசர்கள்  குழாமேனும் அவசியம் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக குறிப்பிட்டார். இந் நிலையிலேயே மனுக்களை நாளைமறுதினம் 12 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான  2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்  உள்ளிட்ட மூவர் இம்மனுக்களை தாக்கல்ச் செய்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு பதிலாக  சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர் முன்னாள் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50