வெளிவிவகார கொள்கையை திருத்துங்கள் சீனாவும் இந்தியாவும் எமக்கு முக்கியம் - மைத்திரி

By Vishnu

10 Aug, 2022 | 09:15 PM
image

(இராஜதுரை ஹஷான்.எம்.ஆர்.எம் வசீம்)

சீன இராணுவ கப்பலுக்கு தடை விதித்து, பாக்கிஸ்தான் இராணுவ கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளமை வெளிவிவகார கொள்கையின் பிரித்தாளும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. தவறான வெளிவிவகார கொள்கையினை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும்.

சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானவை. சர்வதேச உறவினை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியமை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசிய ஒருமைப்பாட்டிற்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என எதிர்பார்த்தோம், இருப்பினும் சர்வக்கட்சி அரசாங்கததின் வியூகம் தற்போது திரிபுப்படுத்ப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

கடந்த மூன்று வருடகாலமாக நாட்டின் வெளிவிவகார கொள்கை முரண்பட்டதாக காணப்படுகிறது.முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க நடுநிலையான வெளிவிவகார கொள்கையினை பின்பற்றினார்.அக்காலத்தில் எந்த நாட்டையும் இலங்கை பகைத்துக்கொள்ளவில்லை. நடுநிலையான வெளிவிவகார கொள்கையினால் உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கின.

நல்லாட்சியின் காலத்தில் நடுநிலையான வெளிவிவகார கொள்கையினை பின்பற்றி பல தவறுகளை திருத்திக்கொண்டோம்.

சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கை அனைத்து நாடுகளுக்கும் நட்பு நாடு என சகல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது .2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்ட பல தடைகள் நீக்கப்பட்டன.

இந்தியாவிற்கும்,இலங்கை;கும் இடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது. 30வருட கால யுத்த்ததை நிறைவிற்கு கொண்டு வர இந்தியா பல ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. மறுபுறம் பொருளாதார மீட்சிக்காகவும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவை போன்று சீனாவும் இலங்கைக்கு முக்கியமான பிறிதொரு நாடாகும். யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரவும்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் சீனா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஆகவே இந்தியா ,சீனா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானது.

சீனாவின் யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் விவகாரம் இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு இந்த கப்பலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடந்த மாதம் 12ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.இந்த கப்பல் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்க முன்னர் குறித்த தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

யுவான் வோங்  -05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிந்திருக்கவில்லை.

அதிகாரிகளின் தீர்மானம் இன்று பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.யுவான் யுவான் வோங் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிக்க வேண்டாம் என அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

இந்த கப்பல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தது.திடிரென தடை விதிக்கும் போது அந்த கப்பலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை கேள்விக்குறியாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.சீன கப்பலை வரவேண்டாம் என குறிப்பிட்டு விட்டு.பாக்கிஸ்தான் இராணுவ கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளமை நாட்டின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி வகித்த காலக்கட்டத்தில் அவர் ஒருமுறை கூட யாழ்ப்பாணத்திற்கு அரச தலைவர் என்ற ரீதியில் விஜயத்தை மேற்கொள்ளவில்லை.

இதனால் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆர்வம் காட்டவில்லை. மறுபுறம் கொவிட் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமையால் முஸ்லிம் நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிட்டுள்ளது.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.ஒரு நாட்டை பகைத்துக்கொண்டு, பிறிதொரு நாட்டுக்கு சார்பாக செயற்படும் போது எத்தரப்பினரும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள்.தவறான வெளிவிவகார கொள்கையினை திருத்திக்கொள்ளாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50