பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்

By Digital Desk 5

10 Aug, 2022 | 05:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன புதன்கிழமை (10)  சபையில்  அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 மற்றும் புதன்கிழமை (10) பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக தவிசாளராக சபாநாயகரையும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதற்கமைய  நிமல் சிறிபால டி சில்வா,  டக்ளஸ் தேவானந்தா,  எம். யூ. எம். அலி சப்ரி,  கஞ்சன விஜேசேகர,  சமல் ராஜபக்ஷ்,  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,  கயந்த கருணாதிலக்க,  அநுரகுமார திசாநாயக்க,  ரவூப் ஹக்கீம்,  பவித்ராதேவி வன்னியாராச்சி, காமினி லொக்குகே,  சீ.பீ. ரத்நாயக்க,  ரிஷாட் பதியுதீன்,  விமல் வீரவன்ச,  ரஞ்சித் மத்தும பண்டார ,  மனோ கணேசன்,  தயாசிறி ஜயசேகர,  ரோஹித அபேகுணவர்தன,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  எம்.ஏ. சுமந்திரன் மற்றும்  சாகர காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08