அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திலுள்ள சகல உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் தினேஷ்

By Digital Desk 5

10 Aug, 2022 | 05:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று  பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அத்தோடு ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி தொடர்பில் பிரிட்டன் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பாரிய வர்த்தக சந்தையாக இலங்கையை முன்னேற்றமடைய செய்வதற்கு , நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண இணைந்து செயல்படுவதற்கான அழைப்பை நாம்  மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு விடுகின்றோம்.

சர்வ கட்சி அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, அரசியலமைப்பு திருத்தம் என அனைத்து முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  அது தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் பாராளுமன்ற தெரிவுக் குழுக்களை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் நிலையியற் கட்டளையில் மாற்றம் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் பொது மக்களுக்கிடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மக்கள் கருத்துகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். எனினும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான வேலைத் திட்டங்கள் அவசியமாகும். அதற்கான நீண்ட கால தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளது. நாட்டின் சனத்தொகை 25 மில்லியனை நோக்கி அதிகரித்து வருகின்றது. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் எமது உற்பத்தித் துறை மற்றும் வீண் விரயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சனத்தொகை அதிகரிப்புக்கினங்க கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கான சேவை வழங்களும் அதிகரிக்கின்றன.அவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நாட்டின் சனத்தொகை அதிகரித்தாலும் அதற்கிணங்க பூமியின் அளவும் நீர் வளமும் அதிகரிக்காது. இத்தகைய புதிய பிரச்சினைகள் தொடர்பில் கடந்த யுகத்தை விட அடுத்து வரும் யுகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் புதிய போக்குவரத்து கொள்கையின் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேசிய போக்குவரத்துக் கொள்கை என்று நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அத்துடன் வீண் விரயங்கள் தொடர்பான நிறுவனங்களை மறுசீரமைப்பு  செய்வது தொடர்பில் ஜனாதிபதி அதில் கவனம் செலுத்தியுள்ளார்.

சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். சில தரப்பினர் அதற்கான இணக்கத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

நாட்டிலுள்ள 14 500 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் புதிய அபிவிருத்தி திட்டங்கள், உணவு உற்பத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மீன்பிடி துறைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எமது நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. இந்திய நாடு அதன் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அடுத்த வருடம் எமது நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதுடன் அதற்கடுத்த வருடத்தில் சீனா அதன் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது.

ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி தொடர்பில் பிரிட்டன் கவனம் செலுத்தியுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் பாரிய வர்த்தக சந்தையாக இலங்கை முன்னேற்றப்பட வேண்டும். அதற்காக எமது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும்.

நம்பிக்கை என்ற பாரிய ஆயுதத்துடன் அரசாங்க நிர்வாகம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்த காலகட்டத்தில், பாராளுமன்றமானது இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப செயல்படுவது அவசியம்.

நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகும். அத்துடன் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் வெறும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53