முல்லைத்தீவில் சுத்தமான குடிநீரைப் பெற சிரமப்படும் 147 குடும்பங்கள்

By Vishnu

10 Aug, 2022 | 04:57 PM
image

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச  செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதும்  கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியிலும் காணப்படும் ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளன. 

தற்போது குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் மேற்படி கிராமத்தில்  இரண்டு பொதுக் கிணறுகள் மாத்திரமே குடிநீர் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கிணறு தற்போதைய வரட்சி  காரணமாக நீரின்றி வற்றிப்போய்யுள்ளது. மற்றைய கிணற்றிலிருந்து நாளாந்தம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே பெறக்கூடியதாவே உள்ளது.

இதனால் குறித்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது. சில வேளைகளில் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று குடிநீர் பெற் வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை விட போக்குவரத்து வசதிகள்  இல்லாத நிலை காணப்படுவதுடன் தமது கிராமத்தில் இருந்து சமுர்த்தி  கொடுப்பனவோ மற்றும் பிரதேச செயலக தேவைகளுக்காக  செல்வதாக இருந்தால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது தங்களது கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரை சென்று அதன் பின்னர் துணுக்காய்  செல்ல வேண்டும் இவ்வாறு மூன்று பேருந்துகளில் பயணித்து தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமது கிராமத்தில் குடிநீரின்மை போக்குவரத்து வசதிகளின்மை காட்டு யானைகளின் தொல்லை என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47