கப்பல் விவகாரத்தில் சீனாவின் அழுத்தத்தை எதிர்த்து நிற்குமா இலங்கை ?

Published By: Rajeeban

10 Aug, 2022 | 03:30 PM
image

indianarrative

இந்தியா வேவு கப்பல் என தெரிவிக்கும் ஆராய்ச்சி கப்பலை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் மனோநிலையையும் ஆழத்தையும் சீனா சோதிக்கின்றது.

ஆகஸ்ட் 11 ம் திகதி யுவான்வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு  செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இலங்கை உடனான தனது உறவுகளில் சீனா தனது போலித்தனத்தை காண்பித்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருட ஆரம்பம் முதல் பொதுமக்கள் அதிருப்தி மோசமான நிதி நெருக்கடி ஆகியவற்றில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு சீனா முன்வராதபோதிலும் சீனா புதிய அரசாங்கத்தின் மீது தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கு நிச்சயமாக முயல்கின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தல விமானநிலையம் போன்ற சீனாவின் பெரும்செலவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் இலங்கைக்கு நன்மையானவையா அல்லது சீன நிறுவனங்களிற்கு நன்மையானவையா என இலங்கை மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளதால் இலங்கையில் சீனாவிற்கு எதிரான ராஜபக்சாக்களிற்கு எதிரான மனோநிலை காணப்படுகின்றது என்பதை சீனா நன்கு அறிந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்குவதற்கான கடனை திருப்பி செலுத்த முடியாததால் அந்த துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு  இலங்கை வழங்கியுள்ளது.

இலங்கை சிக்கலில் சிக்குண்டுள்ளது- இலங்கை கடன்குவியலின் கீழ் சிக்குண்டுள்ளதால் அதனால் சீனாவை நிராகரிக்க முடியாது, என தெரிவிக்கும் தென்னாசிய பல்கலைகழகத்தின் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் பேராசிரியர் தனஞ்செய் திரிபாதி அதேவேளை கப்பலிற்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டமை நிர்வாகத்தில் சீனாவின் வலுவான செல்வாக்கு காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கி;ன்றார்.

இந்தியாவின் அயல்நாடுகளில் எப்போதும் இ;ந்தியாவிற்கு எதிரான ஒரு பிரிவினர் காணப்படுவார்கள் என தெரிவிக்கும் அவர் இலங்கையிலும் இந்தியாவை எதிர்க்கும் ஒரு பிரிவினர் உள்ளனர் என குறிப்பிடுகின்றார்.

ஆனால் இந்தியா அவ்வாறான குரல்களை நிராகரிக்கவேண்டும் என நான் கருதுகின்றேன்,குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இந்த குரல்கள் இல்லாமல்போய்விடும் எனவும் தெரிவிக்கும் அவர் இந்தியாவிற்கு எதிரான பல உணர்வுகளிற்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரலும் வெளிநாட்டு சக்திகளும் காரணம் எனவும் தெரிவிக்கின்றார்.

இந்த வருடம் ஆரம்பம் முதல் இலங்கைக்கு உதவிவழங்கி வரும் நாடாக இந்தியா காணப்படுகின்றது - 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் மனிதாபிமான உதவியையும் வழங்கியுள்ளது.

உதவிக்காக இலங்கை விடுத்த வேண்டுகோள்கள் சீனாவின் காதுகளில் விழவில்லை.

சீனாவின் வெளிப்படையாக பேசும் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வாங்வென்பின் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து தெரிவித்துள்ள திரிபாதி இந்தியாவை வேவுபார்ப்பதற்காக மூன்றாம் உலக நாட்டை பயன்படுத்துவது சீனாவின் மோசமான தந்திரம் இலங்கை ஏனைய நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான உரிமையுள்ள இறைமையுள்ள நாடு என்றால் வேவு கப்பல் குறித்த தனது கரிசனையை தெரிவிப்பதற்கான இறைமை உள்ள நாடு இந்தியா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை வழமையான செய்தியாளர் மாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பாதுகாப்பு கரிசனைகளை காண்பித்து சில நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதை நியாயயப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18