விவசாயிகள், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு மண்ணெண்ணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் - வலிகாமம் மேற்கு தவிசாளர் எரிபொருள் அமைச்சருக்கு கடிதம்

Published By: Digital Desk 3

10 Aug, 2022 | 04:35 PM
image

(எம்.நியூட்டன்)

விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு  மண்ணெண்ணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலிகாமம் மேற்கு  தவிசாளர் எரிபொருள் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளில் இன்று வரையும் மண்ணெண்ணெய் நாட்டில் இல்லை. இதனால் விவசாயிகள் மரக்கறி உற்பத்தி , சிறுதானியப்பயிர் உற்பத்தி மற்றும் இதர உற்பத்திகளை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அதே போன்று கடற்றொழிலை நம்பி வாழுகின்ற மக்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்ல முடியாது வாழ்வாதாரத்தை இழந்து நாளுக்கு நாள் மோசமான பட்டினி சாவுக்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பயன்படுத்கப்படும் இயந்திரங்களுக்கு இழந்து தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

குடிநீர் விநியோக சேவை மண்ணெண்ணெய் அத்தியாவசியமாக உள்ளது . எனவே நாட்டினுடைய ஒவ்வொரு உற்பத்திகளிலும் எரிபொருளின் வகிபாகம் மிக அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இவ்வாறான அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 

இந்நாட்டில் தொடர்ந்து நிலவுகின்ற சீரற்ற அரசியல் ஸ்திரத்தன்மை என்பன தொடர்ந்து தலைவிரித்து ஆடுவதனால் சரியான ஒழுங்கில் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதுள்ளது. 

தற்போது புதிய அமைச்சராக வந்து தாங்கள் செயல்ப்படுவதனால் விரைவில் நாட்டில் ஏற்பட்டுக்கொண்டு வரும் உணவுப்பஞ்சத்திலிருந்து மக்களை காப்பதற்கு மண்ணெண்ணெயின் அவசியத்தை தாங்கள் உணர்ந்தவராக நாட்டின் வளங்களை உறங்கு நிலைக்கு போகாமல் முன்னேற்றுவதற்கு முன்னின்று செயற்படுவீர்கள் என நம்புகின்றேன்.

தற்போது விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் . இவ்வாறான பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் இரட்டிப்பு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் . அத்துடன் உற்பத்தியினுடைய உருவாக்கத்தை மேம்படுத்த விவசாயிகள் , கடற்றொழிலாளர்கள் உட்பட நாட்டின் பொருளாதார சுமைகளை குறைப்பது மிகவும் அவசியமானது. 

ஆகவே இதற்கான நடவடிக்கையை தாங்கள் விரைந்து எடுத்து பெற்றோல் , டீசல் விநியோகத்தைப் போன்று ஒரு ஒழுங்கு முறையில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் மேற்கொள்வதனால் மக்களுக்கு இருக்கும் அவலங்களை தீர்க்க முடியும் எதிர்பார்க்கின்றேன். 

அத்துடன் எதிர்காலத்தில் சீரான ஒழுங்கினை உற்பத்தியாளர்கள் தங்கள் வளங்களில் அதிஉச்ச பயனை அடையும் நோக்கில் புதிய தொழிநுட்பத்தை பரீட்சித்து ஒரு நல்ல பொறிமுறையை நாட்டில் விரைவில் மேற்கொண்டு அறிமுகப்படுத்துவதோடு மாற்றுவலுசக்தியினை பயன்படுத்துவதற்கு தாங்கள் முன்னின்று செயற்படவேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41