பொதுச் சொத்துக்கள் சட்டம், தண்டனைச் சட்டம் பாராளுமன்றத்துக்குள் செல்லுபடியாகாதா ? சஜித் சபையில் கேள்வி

Published By: Vishnu

10 Aug, 2022 | 04:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்துக்குள் பொதுச்சொத்துக்கள் சட்டம் செல்லுபடியாவதில்லை என அமைச்சரவை பேச்சாளரின் கூற்று மக்கள் மத்தியில் பிழையான கருத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதனால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் பாராளுமன்றத்துக்குள் செல்லுபடியாகின்றதா இல்லையா என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்தவேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி அவர் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில சிறப்புரிமைகள் இருக்கின்றன. ஆனால் பொதுச்சொத்துக்கள் சட்டம் பாராளுமன்ற சபைக்குள் செல்லுபடியாவதி்ல்லை என அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். 

52நாள் சட்டவிராேத அரசாங்க காலத்தில் இந்த சபைக்குள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அமைச்சரவை பேச்சாளர் பதிலளிக்கையில், அது பொதுச்சொத்துக்கள் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது. அதுதொடர்பில் சபாநாயகரே தீர்மானிப்பார் என குறிப்பிட்டிருந்தார்.

இ்ந்த பதில், பாராளுமன்றத்துக்குள் ஒரு சட்டம் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஒரு சட்டம் என்றே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. அதனால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் பாராளுமன்றத்துக்குள் செல்லுபடியாவதி்லலையா என்பதை சபாநாயகர்் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடுகையில், அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் இந்த கூற்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மகக்ளின் கோபத்தை தூண்டும் நடவடிக்கையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். பொதுச்சொத்துக்கள் சட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்லுபடியானது.

பாராளுமன்றத்தில் 52நாள் அரசாங்கத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் விசாரணை நடத்த அன்று சபாநாயகராக இருந்த கருஜயசூரிய  குழுவொன்றை அமைத்திருந்தார். அந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம் 5பேர் தவறு செய்தவர்களாக இனம் காணப்பட்டனர். 

அத்துடன் அன்று இடம்பெற்ற வன்முறை காரணமாக  பாராளுமன்றத்துக்கு ஒருஇலட்சத்தி 30ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தேடிப்பார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முற்பட்டபோது, அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை செய்யவில்லை.

ஆனால் பொதுச்சொத்துக்கள் சட்டம் பாாரளுமன்றத்துக்கு செல்லுபடி இல்லை எனஅமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேடமானவர்கள் என்ற செய்தியே மக்களுக்கு செல்கின்றது.

அதனால் இதுபோன்ற விடயங்களை தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வைராக்கியத்தை ஏற்படுத்தவேண்டாம். அதனால் தெரிவிக்கும் விடயங்களுக்கு பொறுப்புக்கூறக்கூய ஒருவரை பேச்சாளராக அரசாங்கம் நியமிக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் பந்துல குணவர்ரதன தனது நியாயத்தை தெரிவிக்க எழுந்தபோதும், அவரால் தெரிவிக்கப்பட்டவிடயங்களுக்கு முறையாக  பதில் அளிக்காமல் வேறு விடயங்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது சபாநாயகர் கேள்விக்கான பதிலை மாத்திரம் தெரிவியுங்கள் என்றார். என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது விளகத்தை முடித்துக்கொண்டார்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58