கிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்பு

Published By: T. Saranya

10 Aug, 2022 | 02:57 PM
image

கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07 ஆம் திகதி இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவு இயந்திரம் காணாமல் போயுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தில் உரிமையாளர் பல இடங்களில் தேடியதுடன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசுவமடு புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள இராணுவ  முகாமிற்கு அருகாமையில் வீதி ஓரமாக குறித்த உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தில் பல உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56