வாசு, விமல், கம்மன்பில ! சுயாதீன கட்சிகளின் புதிய கூட்டணி 21 ஆம் திகதி அங்குரார்ப்பணம்

By Vishnu

10 Aug, 2022 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன.

இப் புதிய கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையில் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமய, அத்துரலியே ரத்ன தேரரின் எங்கள் மக்கள் கட்சி , பேராசிரியர் திஸ்ஸ விதாரண அங்கத்துவம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் , அமைப்புக்களும் இந்த கூட்டணியில் இணையவுள்ளன.

இது தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில் ,

' எம்மால் அமைக்கப்படவுள்ள இந்த புதிய கூட்டணியில் தலைமைத்து சபையே ஸ்தாபிக்கப்படும்.

குறித்த தலைமைத்துவ சபையில் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோர் அங்கத்துவம் பெறுவர். 21 ஆம் திகதி எமது கூட்டணியின் பெயரை வெளிப்படுத்துவோம்.' என்றார்.

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவிக்கையில் ,

'சர்வகட்சி அரசாங்கம் குறித்த யோசனைகளை முன்வைப்பதற்கு பதிலாக அமைச்சுப்பதவிகளை குறிப்பிட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து வெளிவந்து , நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறிருப்பினும் இன்றும் எமது நாட்டில் அதிகார போராட்டத்தினையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசியல்வாதிகளிடத்தில் இன்னும் தோற்றம் பெறாமை துரதிஷ்டவசமானதாகும்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் போலி நாடகமாகும். எனவே தான் நாம் நாட்டு நலன் குறித்து சிந்தித்து புதிய பாதையில் பயணிக்க தீர்மானித்துள்ளோம்.' என்றார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவிக்கையில் ,

'சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படுமே தவிர , நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை மிக்க சர்வகட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் இதுவரையிலும் முன்வைக்கப்படவில்லை. எமது புதிய கூட்டணியின் ஊடாக இந்த புதிய வேலைத்திட்டங்களை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவோம்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50