மின் கட்டண அதிகரிப்பானது மக்களை மின்சார கதிரையில் ஏற்றியுள்ளது - அதிகரிக்க வேண்டாமென கிரியெல்ல கோரிக்கை

By Vishnu

10 Aug, 2022 | 02:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச தலைவர்களை மின்சார கதிரையில் ஏற்றப்போவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றியுள்ளது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி அவர் குறிப்பிடுகையில்,

மின்சார கட்டணம் நூற்றுக்கு 75வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் அது நூற்றுக்கும் அதிக வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது இந்தளவு பாரிய தொகையை அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது? மக்களின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

அத்த்துடன் அரச தலைவர்களை மின்சார எதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக தெரிவித்தே  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் தற்போது இவர்கள் மின்சார கட்டணத்தை அதிகரித்து மக்களை மின்சார கதிரையில் ஏற்றி இருக்கின்றனர்.

அதனால் அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றுக்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விவாதம் முடியும் வரைக்கும் மின்சார கட்டணம் அதிகரிப்பதை இடை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

அதனை தொடர்ந்து எழுந்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதற்கு பதிலளிக்கையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை. அதனால் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு தயார் என்றார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் இதற்கு பதிலளிக்கையில், இதுதொடர்பாக விவாதம் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

75 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக...

2023-01-28 16:41:56
news-image

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை...

2023-01-29 10:23:51
news-image

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

2023-01-29 09:29:47
news-image

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார...

2023-01-28 13:02:13
news-image

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ?...

2023-01-28 12:59:57
news-image

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர்...

2023-01-28 13:55:10
news-image

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த...

2023-01-28 12:37:27
news-image

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல்...

2023-01-28 11:31:02
news-image

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி...

2023-01-28 15:35:58
news-image

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும்...

2023-01-28 15:13:05
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி...

2023-01-29 09:26:07
news-image

காணி தகராறு ; இருவர் கொலை

2023-01-28 13:55:45