புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகம் செய்தது வட்ஸ்அப்

Published By: Digital Desk 3

10 Aug, 2022 | 11:10 AM
image

வட்ஸ் அப் பயனர்கள் தனியுரிமை சார்ந்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

வட்ஸ்அப் செயலியை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அம்சங்களை மெட்டா நிறுவனத்தின் வட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் பயனர்களின் தனியுரிமை சார்ந்த விடயங்களில் கவனம் வைக்கும் விதமாக வட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சங்கள்

பயனர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் போது தங்களது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த அம்சம் பர்சனல் மற்றும் அஃபிஷியல் என பல்வேறு வகைகளில் பயனர்களுக்கு உதவலாம்.

இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இது ரோல்-அவுட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் ஒரு வட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித நோட்டிபிகேஷனும் இல்லாமல் வெளியேறலாம் (Exit ) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சில இம்சையான குரூப்களில் இருந்து பயனர்கள் வெளியேற உதவும்.

வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட் அம்சம் சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மெசேஜை டெலிட் செய்வதற்கான காலக்கெடுவை நீடிக்கப்பட்டு உள்ளதாம். இதன் மூலம் ஒரே மெசேஜை டெலிட் செய்ய அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரையில் டைம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disappearing மெசேஜஸ் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நபர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாத வகையில் தங்களது வட்ஸ்அப் செயலிக்கு பாஸ்வேர்டு செட் செய்யும் அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26