அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், வழக்குகள் தொடர்பில் தன்னிடம் வரும் பெண்களை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த கோறி கல்சர்னோ எனும் சட்டத்தரணி மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொழில் ரீதியில் தன்னிடம் வரும் பெண்களின் வழக்கு விசாரணைகளை கையாள்தற்காக அல்லது பணத்துக்காக பாலியல் உறவில் ஈடுபடச் செய்வதற்கு கல்சர்னோ முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைக்கு அடிமையாதல், பாலியல் ரீதியாக தாக்கப்பட்டவர்கள், பொருளாதார பிரச்சினைகளில் சிக்கியுள்ள பெண்களை கல்சர்னோ இலக்கு வைத்தார் என பென்சில்வேனியா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிலைமைகளிலுள்ள பெண்களை இலகுவாக மௌனமாக்கிவிடலாம், அவர்கள் குற்றச்சாட்டு சுமத்த முன்வந்தாலும் அவர்கள் இலகுவாக நம்பப்பட மாட்டார்கள் எனக் கருதியே இப்பெண்களை கல்சர்னோ தெரிவுசெய்தார் என பென்சில்வேனியா சட்ட மா அதிபர் ஜோஷ் ஷபிரோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி கோறி கல்சர்னோ 20,000 டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்சர்னோவின் தொலைபேசியிலிருந்து அவரின் வாடிக்கையாளர்களின் பாலியல் ரீதியான நூற்றுக்கணக்கனா படங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2018 முதல் 2022 வரையான காலத்தில் இக்குற்றங்கள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் 2005 முதல் 2011 வரை லக்கவன்னா பிராந்திய அரச வழக்குத் தொடுநராக பணியாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனது சட்டத்தரணி அனுமதிப்பத்திரத்தை கைவிடுவதற்குத்தான் தீர்மானித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கொறி கொல்சர்னோ கூறினார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM