பாகற்காயின் மருத்துவக் குணம்

By Devika

10 Aug, 2022 | 12:37 PM
image

பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை பாகற்காய் போக்குகிறது.

பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்­கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டி­களையும் பாகற்காய் நீக்கும்.

நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக போராடுகிறது. இதில் சாரன்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. பாகற்காயை அடிக்கடி எடுத்­துக் கொள்ளும்போது அது இரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்­கரை­யின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்­குள் இருக்கும்.

பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், பெ.சீரகம் சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பாகற்காய் சாற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்சினை நீங்கும்.

பாகற்காயை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடலை நோய் தொற்றிலிருந்து காக்கிறது.

தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்சினை­கள் நீங்கும்.

சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. 

வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54
news-image

இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன...

2023-01-28 13:21:14
news-image

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல!

2023-01-27 18:27:50
news-image

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா?

2023-01-27 16:59:02
news-image

சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின்...

2023-01-27 16:27:34
news-image

பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்!

2023-01-27 14:00:31
news-image

கோப்பி குடித்தால் உடல் எடை குறையுமா?

2023-01-27 14:02:24
news-image

மார்பக புற்றுநோயை எளிதாக வெல்லலாம்

2023-01-27 13:59:59
news-image

உணவுக் கட்டுப்பாட்டின் பக்க விளைவுகள்

2023-01-27 11:36:30
news-image

குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா..?

2023-01-26 15:55:33