யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்ற ரசலிங்கம் பொன்னம்பலம் என்பவரின் வீட்டுக்கு இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை எரிபொருள் நிரப்ப வந்த இரு இளைஞர்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , பணியாளர்களுக்கு வாளினை காட்டி மிரட்டியும் உள்ளனர்.
சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெறும் போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த உரிமையாளரின் உறவினரின் வீட்டினுள் இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளது.
வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM