பேபிகோர்ன் ரைஸ்

Published By: Devika

10 Aug, 2022 | 10:47 AM
image

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 1 கப்

வட்டமான துண்டுகளாக நறுக்கிய பேபிகோர்ன் - 4

தக்காளி - 4

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கொத்தமல்லித்தழை - தேவைக்கு

தாளிக்க...
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி சீரகத்தை தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பேபிகோர்னை சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். 
கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்