கருணைக்கால இடைவெளி

By Devika

10 Aug, 2022 | 10:36 AM
image

கேள்வி: 
எனக்கு வயது 23. திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் கருத்­தரிப்ப­தற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வைத்திய பரிசோதனை செய்துகொண்டபோது பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள். எனது உயரம் 5.6 அடி. எடை 70 கிலோ. கருத்தரிப்பதற்கு இயற்கை வைத்திய முறை எதையாவது கூறவும். அதேபோல் மாதவிடாய் ஏற்பட்ட எத்தனையாவது நாளில் நாம் உறவு வைத்­துக்கொள்ள வேண்டும் என்று (அதாவது நான் கருத்தரிப்பதற்கு ஏற்ற நாள்) கூறவும்.

பதில்: 
உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று வைத்தியர் சொல்லிவிட்டாரல்லவா! அதை முழுமையாக நம்­புங்­கள். உங்களது உயரம், எடை என்பன மிக மிக சரியான அளவிலேயே இருக்கின்றன. உங்களது வயது கூட உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்­கி­றது. ஆகையால், எந்தப் பிரச்சினையும் இல்லை. வீண் கவலைகள் வேண்டாம். கருத்தரிக்காததற்கு பல காரணங்கள் இருக்கலாம், காரணங்கள் இல்லாமலும் இருக்கலாம். உங்களது விடயத்தில் காரணங்கள் எதுவும் இல்லை போலும். நீங்கள் கருத்தரிப்பதற்கான நேரம் குறித்துக் கேட்டிருக்கிறீர்கள். எனவே, அதில் ஏதும் குளறுபடிகள் இருக்கலாம்.

உங்களுக்கு மாதவிடாய் சீராக வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதற்கு சில மாதங்கள் மட்டும் மருந்து எடுத்துக்­கொண்டு குணப்படுத்திவிடலாம்.

பொதுவாகவே மாதவிடாய் தோன்றிய பத்தாவது நாள் முதல் பதினேழு முதல் இருபதாவது நாள் வரை கருத்தரிப்பதற்கு உரிய காலம். அந்தக் காலகட்டத்தில் தான் கருமுட்டைகள் வெளியேறும். அந்தக் காலங்­களில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்களும் இதுபோன்ற நாட்களில்தான் உறவு கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து­கொள்ளுங்கள். மேலும், பரிசோதனை முடிவு­கள் சாதகமாக இருப்பதால் இது குறித்து நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. முடிந்த­வரை உங்கள் இருவருக்கும் இடையிலான அன்னி­யோன்­னியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் உங்­கள் கணவரும் தனியாகச் சில காலங்கள் சந்­தோஷத்தை அனுபவிப்பதற்கு உங்கள் மீது இரக்­கப்பட்டு உங்கள் பிள்ளை தந்திருக்கும் ஒரு கரு­ணைக்­கால இடைவெளி (Grace Period) தான் இது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54
news-image

இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன...

2023-01-28 13:21:14
news-image

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல!

2023-01-27 18:27:50
news-image

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா?

2023-01-27 16:59:02
news-image

சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின்...

2023-01-27 16:27:34
news-image

பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்!

2023-01-27 14:00:31
news-image

கோப்பி குடித்தால் உடல் எடை குறையுமா?

2023-01-27 14:02:24
news-image

மார்பக புற்றுநோயை எளிதாக வெல்லலாம்

2023-01-27 13:59:59
news-image

உணவுக் கட்டுப்பாட்டின் பக்க விளைவுகள்

2023-01-27 11:36:30
news-image

குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா..?

2023-01-26 15:55:33