சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து

Published By: Digital Desk 3

10 Aug, 2022 | 09:48 AM
image

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் (Wavel Ramkalawan),  இலங்கை தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் வென்று பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு டென்மார்க் பிரதமர் மெட் பிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றமை, அவரின் தலைமைத்துவத் திறன் மீதான நம்பிக்கைக்கு சான்றாக அமைவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் மிக நெருக்கமாக பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாகவும் சிம்பாப்வேயின் ஜனாதிபதி எமர்சன் டம்புட்ஸோ மனன்க்வா Emmerson Dambudzo Mnangagwa தனது வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சேர்பியாவின் ஜனாதிபதி எலக்சன்டர் வுசிக் (Aleksandar Vucic), இரு நாடுகளினதும் பாரம்பரிய மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் மேம்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், அதற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள எத்தியோப்பிய ஜனாதிபதி சாஹ்லேவொர்க் ஸேவ்ட் (SahleWork Zewde), இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53