திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ள நடிகர் மம்முட்டி 

By T Yuwaraj

09 Aug, 2022 | 08:16 PM
image

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக இந்திய திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் உள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்பிற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும், சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலாத் தூதுவர் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய ஆகியோரும் அவரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தற்போது இந்தியத் திரையுலகில் 5 தசாப்தங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, அவரது திரையுலகில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்