காலவரையறையை தெரிவித்தால் மாத்திரமே இடைக்கால நிர்வாகத்துக்கு ஆதரவு - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Vishnu

09 Aug, 2022 | 08:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமது வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை உரையாக முன்வைத்திருக்கின்றார். அதனால் அதற்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிப்போம்.

அத்துடன் அரசாங்கம் மூன்று வருடங்கள் செய்துவந்த தவறான வேலைத்திட்டங்களை  ஜனாதிபதி அரை நிமிடங்களில் பின்னோக்கி எடுத்துச்சென்றிக்கின்றார் என லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்தின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிர்கட்சியின் ஆதரவு தேவை என்றால் காலவரையறை ஒன்றை ஜனாதிபதி தெரிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த கொன்கை உரை, அரசாங்கத்தின் 3 வருட வேலைத்திட்டத்தை முற்றாக பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கின்றார். எமது வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி முன்வைத்திருக்கின்றார். 

அதனால் எமக்கு அதனை எதிர்க்க முடியாது. குறிப்பாக 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள கொண்டுவருமாறு நாங்கள் தெரிவித்து வந்தோம். 

பாராளுமன்ற துறைசார் மேற்பா்வைக்குழுவை மீள் ஸ்தாபிக்குமாறு தெரிவித்தோம். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு தெரிவித்தோம். 

அரசாங்கம் இவை எதனையும் செய்யவில்லை. ஆனால் இன்று ஜனாதிபதி அவை அனைத்தையும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் கொள்கை உரை மூலம் கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் 3வருட வேலைத்தி்ட்டம் அர்த்தமற்றது என்பது தெளிவாகி இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த தவறான வேலைத்திட்டத்தை மாற்றியமையக்க நாங்கள் 3வருடங்களாக எடுத்த முயற்சியை ஜனாதிபதி அரை மணி நேரத்தில் செய்திருக்கின்றார். 

மேலும் பிரச்சினைகளுக்கு தீரவுகாண ஜனாதிபதி இடைக்கால நிர்வாகத்துக்கு ஆதரவளிக்குமாறு கோரி இருக்கின்றார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஆதரவளிக்க நாங்கள் தயார்.

ஆனால் இடைக்கால நிர்வாகம் எவ்வளவு காலத்துக்கு என்று வரையறுக்கப்படவேண்டும். காலவரையறை தெரிவிக்காமல் ஜனாதிபதியின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிர்க்கட்சியின் ஆதரவை பெறமுடியாது.

ஏனெனில் 2வருடங்களுக்கு இதனை இழுத்துக்கொண்டு செல்ல முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் அமைத்து,  அதனை செயற்படுத்திக்கொண்டு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

ஏனெனில் வங்குராேத்து அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி செய்யப்போவதில்லை. புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறே சர்வதேச நாடுகள் கோரி வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51