ஹிலாரி எதிர் டிரம்ப் : அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி யார் ? 

Published By: Priyatharshan

09 Nov, 2016 | 10:19 AM
image

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யாரென்றபோட்டி  ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவிக்கான தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் முதலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனிடையே இலங்கை நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு கென்டகி மற்றும் இன்டியானா மாகாணங்களில் வாக்குப்பதிவு முதலாவதாக நிறைவடைந்தது. 

இதையடுத்து 5:30 மணியளவில் ஃபுளோரிடா, விர்ஜினியா, ஜோர்ஜியா, சவுத் கலிபோர்னியா மற்றும் வெர்மோன்ட் பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 

இதன்பிறகு, தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவரத் தொடங்கின. சர்வதேச ஊடகங்கள் சில ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் இருப்பதாக கணித்துள்ளன. 

538 பிரநிதிகளில் குறைந்தது 270 பிரநிதிகளைப் பெறும் கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 

இந்த நிலையில், கென்டகி, இன்டியானா, மேற்கு விர்ஜினியா ஆகியவற்றில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்  தற்போதைய தேர்தல் நிலைவரப்படி முன்னிலையிலுள்ளார், 

நியூயோர்க், வெர்மோன்ட்டில் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ள ஹிலாரி போட்டி போட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, புளோரிடா, பென்சில்வேனியா தொகுதிகளில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். 

தற்போதைய நிலைவரப்படி டிரம்ப் 232 தொகுதிகளிலும் ஹிலாரி 109 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

2000, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் டிக்ஸ்வில்லி பகுதியில் வெற்றி பெற்றவர்களே அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அதிக மக்கள் தொகையில் கூடிய மாநிலமாக புளோரிடா விளங்குவதால், இம்மாநிலத்தில் 29 தேர்தல் அவை வாக்குகள் இருப்பதாலும், ஃபுளோரிடா மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.

 பராக் ஒபாமாவை அடுத்து அமெரிக்க அதிபராக பதவியேற்க போகும் நபர் யார் என்பதன் அறிகுறியை இந்த முக்கிய மாநிலம் தரக்கூடும்.

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி  தேர்தல்களில், 2004-இல் ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்யையும், 2012-இல் மிட் ரோம்னியையும் இந்த மாநிலம் ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது நமக்கு எப்போது தெரியும்?

ஜி.எம்.டி. 0400 முதல் 0500 மணி வரையிலான நேரத்தில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தெரிய வரும்.

பொதுவாக அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தவர், வெற்றி பெற்றவரை தொலைபேசியில் அழைத்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கமான நடைமுறையாகும்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. மாறாக, நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா (மாகாணத்தின் கீழ் வராத வாஷிங்டன் நகரம்) மாவட்டத்திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்குகள் மாகாண அளவிலேயே  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிய வரும்.

எனினும், இந்த தேர்வாளர்கள் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை டிசம்பர் 19 ஆம் திகதி முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெற குறைந்தபட்சம் 270 தேர்வாளர்களின் ஆதரவு தேவை. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொள்வார்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிலாரி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு- ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் ஒருவர் இரண்டு தடவையும் ஒரு கட்சி இரண்டு தடவையும் ஆட்சியில் இருந்துள்ளன.

ஆனால் மூன்றாவது தடவையாகவும் ஒரு கட்சி ஆட்சியில் இருந்ததில்லை. ஆகவே ஹிலாரிக்கு இந்த தேர்தல் முதல் தடவையாக இருந்தாலும் அவர் போட்டியிடுகின்ற ஜனநாயகக் கட்சி மூன்றாவது தடவையாகவும் ஆட்சியில் இருப்பதற்கு அமெரிக்க மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் .

அத்துடன் முதலாவது பெண் வேட்பாளர் என்ற நிலையிலும் அமெரிக்க மக்கள் சிந்தித்தால் அதுவும் வாய்ப்பாக ஹிலாரிக்கு வரலாம்.

ஆகவே ஹிலாரி, ட்ரம்ப் ஆகிய இரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையேயான போட்டி என்பதை விட அமெரிக்க மரபுவழி முறைக்கும், மாற்றத்தை விரும்புகின்ற மக்களுக்கும் இடையேயான போட்டியாகவே இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்லப்போவதென....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04