நடிகர் அருள்நிதியின் 'டைரி' வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Vishnu

09 Aug, 2022 | 08:45 PM
image

'டி பிளாக்', 'தேஜாவு' என இரண்டு படங்களைத் தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'டைரி' படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டைரி'. இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' பட புகழ் ரலன் ஈதன் யோகன் இசையமைத்திருக்கிறார்.

க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தின் வெளியிட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி 'டைரி' திரைப்படம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'டி பிளாக்', 'தேஜாவு 'என வரிசையாக ஆங்கில எழுத்து 'D' யில் தொடங்கும் பட தலைப்பில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி, மீண்டும் 'D' என ஆங்கில எழுத்தில் தொடங்கும் 'டைரி' படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என தெரிவிக்கிறார்கள்.

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த 'டைரி' திரைப்படத்தை, அவரது சகோதரரும், முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயவுடன் 'டைரி' திரைப்படம் வெளியாவதால், இதற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இருவர்' முதல் 'பொன்னியின் செல்வன்' வரை...

2022-10-05 12:32:07
news-image

கதாசிரியரானார் யோகி பாபு

2022-10-05 11:23:02
news-image

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 -...

2022-10-04 17:22:13
news-image

சத்யராஜ் - வசந்த் ரவி இணையும்...

2022-10-04 10:53:35
news-image

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின்...

2022-10-04 10:53:16
news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28