சீனக் கப்பல் விவகாரம் : இந்தியாவைப் பகைத்து சீனாவிற்கு ஆதரவாக செயற்படக் கூடாது - இராதாகிருஸ்ணன்

By Vishnu

09 Aug, 2022 | 08:44 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)

சீனக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு சீனாவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்பட கூடாது. நாட்டு நன்மைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

அதற்காக அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க வேண்டிய தேவை கிடையாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்  வி.இராதாகிருஸ்ணன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் ஒரு சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளன.

அதனை முறையாக செயற்படுத்தினால் அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இடைப்பட்ட காலத்தில் அனைத்து திட்டங்களும் செயற்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அதிகாரத்திற்கு வந்தவுடன் அவசரகால சட்டத்தை பிரயோகித்து போராட்டகாரர்கள் மீது அடக்கு முறையினை கட்டவிழ்த்து பலரை கைது செய்துள்ளார்.

அவசரகால சட்டம், போராட்டகாரர்கள் மீதான அடக்குமுறை என்பன தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்கும் போது அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க வேண்டிய தேவை கிடையாது. எனவே நாம் அமைச்சு பதவிகளை ஏற்க போவதில்லை.

மலையகத்தில் பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன. கடந்த வாரம் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடம்பெற்ற திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பெரும்பாலான நகரசபைகள் மாநாகர சபைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஹட்டன் நகர சபையை மாநாகர சபையாக தரமுயர்த்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

சீனாவின் யுவான் கப்பல் விவகாரம் பூகோள அரசியலில் சகல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள பல சந்தர்ப்பங்களில் இந்தியா நட்பு நாடாக தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது கூட இந்தியா சுமார் 4 பில்லியன் நிதியுதவிவை வழங்கியுள்ளது.

இந்தியாவிற்காக சீனாவை பகைத்துக்கொள்ளலாம் என ஒருபோதும் குறிப்பிடவில்லை. இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனாவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்பட கூடாது என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34