(நா.தனுஜா)
தற்போது அமுலிலுள்ள அவசரகாலநிலையை உரிய முறைமையைப் பின்பற்றி நீக்குமாறும், அவசரகால வழிகாட்டல்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' போராட்டத்தில் அங்கம்வகித்த 5 அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டத்தில் அங்கம்வகித்த பிளக் கப்ஸ் மூவ்மென்ட் (கறுப்புத்தொப்பி இயக்கம்), பிளஸ் வன் - நாட்டுக்காக நானும் ஒருவன், சோஸலிச சகோதரத்துவம், அனைத்துக்கட்சிப் போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டக்களத்தில் இளைஞர்கள் ஆகிய 5 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகாலநிலைப்பிரகடனத்தில் சோதனையிடுதல் மற்றும் கைதுசெய்தல் என்பன தொடர்பான குற்றவியல் சட்டக்கோவையின் 365 மற்றும் 365(அ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த வாரம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து அவசரகாலநிலைப்பிரகடனத்தில் இருந்து மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகள் நீக்கப்பட்டமைமை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.
இந்த சுமுகமான நிலைவரத்தை ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துடனும் நடாத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கான பச்சைக்கொடியாகக் கருதுகின்றோம்.
அவசரகாலநிலைப்பிரகடனத்தின் கீழான வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், நாமனைவரும் பொதுமக்கள் போராட்டத்துடன் தொடர்புடைய தரப்பினர் என்ற அடிப்படையில் அவசரகாலநிலைப்பிரகடனம் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
அதன்படி தற்போது அமுலிலுள்ள அவசரகாலநிலையை உரிய முறைமையைப் பின்பற்றி நீக்குமாறும், அவசரகால வழிகாட்டல்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு அவசரகாலநிலைப்பிரகடனம் நீக்கப்படும் வரை அதனை முன்னிறுத்தி பரவலாகவும் ஒன்றிணைந்தும் செயற்படுவோம் என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM