சமையல் எரிவாயு விலைகளில் மாதாந்தம் திருத்தம் : லாஃப் எரிவாயு விலைகளும் குறைக்கப்படலாம் - அரசாங்கம்

Published By: Vishnu

09 Aug, 2022 | 08:27 PM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயுவிற்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்திற்கமைய மாதாந்தம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் , லாஃப் நிறுவனமும் விலை குறைப்பிற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

'லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தினால் எதிர்வரும் நாட்களில் விலை குறைப்பிற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மற்றும் அதன் விநியோகம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கப்படும்' என்றார்.

இதே வேளை திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00