காத்தான்குடி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நேற்று இரவு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார்.

காத்தான்குடி, கடற்கரை வீதி, ஜெம் ஜுவலரிக்கு முன்பாக உள்ள இரும்புக்கடை உரிமையாளரான அபூ தாஹிர் (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி 05, ஆதம் போடி ஹாஜியார் லேனைச் சேர்ந்த இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.

இவர் மீது யாரோ வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து சென்றாகவும் வீதியால் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கரைகளுடன் அவரே ஏறிச்சென்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விபத்தா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பில் வைத்தியசாலைக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.

-அப்துல் கையூம்